Saturday, February 9, 2008

கனவான்கள் விளையாட்டில் அயோக்கியர்கள் ( Scoundrels in Gentlemen's Game)

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் சுற்றுப் பயணம் கேலிக்குரியதாக - கேள்விக்குரியதாக மாறி இருக்கிறது. அந்தப் புண்ணியத்தை செய்தது கிரிக்கெட் என்னும் நல்ல மரத்தில் புல்லுருவிகளாக முளைத்துள்ள நடுவர் ஸ்டீவ் பக்னர், மேல் முறையீட்டாளர் மைக் புரக்டர் மற்றூம் ரிக்கி பொண்டிங் & Co., ஆனால் இங்கு அடிபட்டவன் குற்றவாளி ஆக்கப் பட்டிருக்கிறான்.

ஸ்ரீசாந்த் ஆஸ்த்ரேலியா வருவார். ஆடும்போதே ஆர்ப்பாட்டங்கள் செய்வார் அவரை வைத்துப் பிரச்னை பண்ணலாம் என்று ஆஸ்த்ரேலியா அணி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக்கிடந்தது. ஆனால் அவர் செல்லவில்லை. பதிலுக்கு எளிதில் உணர்ச்சி வசப்படும் ஹர்பஜன் சிங்கை பிடித்துகொண்ட்டார்கள்.

அண்ட்ரூ சைமண்ட்சைப் பார்த்து அவர் குரங்கு என்று சொன்னதாகக் குற்றச்சாட்டு. இது நடுவர்கள் காதில் விழவில்லை. ஒலி - ஒளி பதிவுகளில் இல்லை. ரிக்கி பொண்டிங்கும், கிளார்க்கும் தான் சாட்சி. இவாகள் ஆடு களத்தில் நடந்து கொண்ட விதத்திலிருந்தே இவர்கள் எவ்வளவு பெரிய (அ)யோக்கியர்கள் என்பது தெரிந்து போயிற்று. அவர்கள் சாட்சிய்ம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சம்பவ சமயம் ஹர்பஜன் கூட இருந்த டெண்டுல்கரின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப் பட்வில்லை. அது எதிர்பார்க்கப் பட்டதுதான்.

ஏனெனில், தென் ஆஃப்ரிக்கவைச் சேர்ந்த நிற வெறியரான மை புரக்டர் இதற்கு முன்பும் கறுப்பர்களுக்கு ஒரு நியாயம் வெள்ளைத் தோல்களுக்கு ஒரு நியாயம் என்று தான் நடந்து வந்திருக்கிறார். முன்பு நிறவெறி பிடித்த அணி என்று அறியப்பட்டு "ஊர் விலக்கி வைக்கப்பட்ட்ட" தெ,ஆ, அணியின் உறுப்பினர் புரக்டர் தங்கள் நிற் வெறியை மறைக்க கறுப்பர்கள் மீது இனவெறிக் குற்றச்சாட்டுகள் வரும்போதெல்லாம் அது அப்படித்தான் என்று நிறுவ முனைந்திருக்கிறது மைக் புரக்டர் கும்பல்.

ஆஸ்த்ரேலியா இக்கட்டான கட்டத்தில் இருக்கிறது. இஷான் சர்மாவின் பந்து அண்ட்ரூ சைமண்ட்சின் மட்டையில் பட்டு நேராக டோனியிடம் செல்கிறது. அண்ட்ரூ தான் அவுட் என்று வெளியேறப்போகிறார். அப்படிப் போயிருந்தால் அவர் யோக்கியர். ஆனால் நடுவர் ஸ்ட்டிவ் பக்னரைப் பார்க்கிறார். அவர் அவுட் இல்லை என்கிறார். தொடர்ந்து ஆடிய சைமண்ட்ஸ் சதம் பெறுகிறார். அப்போதே ஆட்டம் இந்தியவின் கையை விட்டுப் போன மாதிரிதான். இன்னொன்றில் சைமண்ட்ஸ் ஸ்டம்ப் செய்யப்பட்டபோது அவர் கால்கோட்டுக்குள்ளே இல்லை. மூன்றாவது நடுவரைக் கேட்காமலேயே பக்னர் அவுட் இல்லை என்கிறார்.

கிளார்க் தெளிவாகக் கேட்ச் கொடுத்த பின்னரும் அசையாமல் நிற்கிறார். பொண்டிங்குக்கு எதிரான முறையீடும் நிராகரிக்கப் படுகிறது அதே சமயம் திராவிடின் மட்டையை விட்டு நான்கு அங்குலம் விலகிச் சென்ற பந்து மட்ட்டியில் பட்டதாகக் கூறி பக்னர் அவுட் கொடுக்கிறார்.

அதை விடக் கேவலம் கங்கூலி அடித்த பந்தை கிளார்க் சுருண்டு விழுந்து பிடிக்கிறார். பந்து தரையில் படுகிறது. நடுவர் பென்சன் சக நடுவரிடம் ஆலோசனை கேட்கவில்லை. மூன்றாவது நடுவரிடம் செல்லவில்லை மாறாக ஆஸ்.அணித்தலைவர் பொண்டிங்கிடம் கேட்கிறார். அவர் இளக்காரமாக அவுட் என்னும் அர்த்தத்தில் விரலை உயர்த்துகிறார். பென்சனும் அதையே செய்கிறார்.

அதை விடக் கேவலம் கங்கூலி அடித்த பந்தை கிளார்க் சுருண்டு விழுந்து பிடிக்கிறார். பந்து தரையில் படுகிறது. நடுவர் பென்சன் சக நடுவரிடம் ஆலோசனை கேட்கவில்லை. மூன்றாவது நடுவரிடம் செல்லவில்லை மாறாக ஆஸ்.அணித்தலைவர் பொண்டிங்கிடம் கேட்கிறார். அவர் இளக்காரமாக அவுட் என்னும் அர்த்தத்தில் விரலை உயர்த்துகிறார். பென்சனும் அதையே செய்கிறார்.

உலகக் கோப்பை மே.இ.தீவுகளில் நடைபெற்றது என்பதற்காக மே.இ. தீவுகளைச் சேர்ந்தவன் இவன் இறுதி ஆட்டத்துக்கு நடுவனாக நியமிக்கப்பட்டான். அப்போதும் இலங்கைக்கு எதிராக இவன் அடித்த கூத்துகளை உலகறியும். அப்போதே இவனை வீட்டுக்கு அனுப்பி இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல நடுவர்களுக்கு வயது வரம்பு 60 என்று நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அவன் ஏன் இன்னும் தொடர அனுமதிக்கப் பட்டிருக்கிறான். சர்வதேச கிரிக்கட கட்டுப்பாட்டு வாரியத்தின் இப்போதைய தலைவர் ஸ்பீட் ஆஸ்த்ரேலியர். ஆகவே உலகக் கோப்பையின் போது செய்த உபகாரங்களுக்காக இந்த பதவி நீடிப்பு என்பது ஊடகங்களின் கணிப்பு.

1983 ல் உலகக் கோப்பையில் இந்தியா மே.இ.தீவுகளைத் தோற்கடித்தது முதல் இவன் இந்தியாவுக்கு எதிரான வன்மத்தை நெஞ்சில் சுமந்து திரிவதாக ஒரு கதை உலா வருகிறது. "நடுநிலை" கருதித்தான் பிற நாட்டு நடுவர்கள் நியமிக்கப் படுகிறார்கள். அது அப்படி யென்றாலும் யாரை நடுவராகப் போடுவது -போடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்தந்த நாட்டு கிரிக்கட் வாரியங்களுக்கு உண்டு. அப்படியானால் இந்திய வாரியம் ஏன் இவனை அடையாள்ம் கண்டு கொண்டு இவன் வேண்டாம் என்று நிராகரிக்கவில்லை என்பது வாரியத்துக்கே தெரிந்த ரகசியம்.

பக்னர் இந்தியா கலந்து கொண்ட 21 போட்டிகளில் நடுவனாக (இல்லை ஓர வஞ்சனையாளனாகப்) பணி புரிந்திருக்கிறான். அதில் ஐந்தில் மட்டுமே இந்தியா வென்றிருக்கிறது. பெரும்பாலானவற்றில் இந்தியா தோற்றதற்கும், வெற்றி பெற வேண்டிய ஆட்டங்கள் சம நிலையில் முடிந்ததற்கும் பக்னரே காரணம்.

உதாரணத்துக்கு சில அநியாயங்கள்:
1992 - 93: தென் ஆஃப்ர்ர்க்கா - ஜோஹான்னஸ்பர்க். தென் ஆ. ஐந்து விக்கட் இழப்புக்கு 75 ரன்கள். ஜோண்டி ரோட்ஸ் ஒரு ரன் எடுக்க முயல்கிறார். மூன்றாவது நடுவரைக் கேட்டிருந்தால் அவர் அவுட். கேமரா கோணங்கள் அதைத்தான்சொல்லின. ஆனால் மூன்றாவது நடுவருககு்ப் போகாமலேயே பக்னர் ரோட்ஸ் அவுட் இல்லை என்றான் வெற்றி இந்தியாவின் கை நழுவிப் போயிற்று.

1998 - 99: இந்தியா - பாகிஸ்தான் - கொல்கொத்தாசொஹைப் அக்தர் ரன் எடுக்கும் சச்சினை ஓடும்போது தடுக்கிறார். சச்சினால் எல்லைக் கோட்டை எட்ட முடியவில்லை.அது முறையற்ற ஆட்டம் என்று அந்த ரன் அவுட் முறையீட்டை பக்னர் நிராகரித்திருக்க வேண்டும் ஆனால் பக்னர் வேண்டுமென்றே மூன்றாவது நடுவரை அணுகுகிறார். அவரால் அவுட் தானே கொடுக்க முடியும். இப்படிப்பட்ட அநியாயங்களால் பாகிஸ்தான் வெற்றி பெறக் காரணமாக இருந்தான் பக்னர்.

2003 - 04 ஆஸ்த்ரேலியா - ப்ரிஸ்பேன்ஜேசன் கில்லஸ்பி டெண்டுல்கருக்கு வீசிய பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே தொடைக்கு மேலே படுகிறது. முறையீடு இல்லாமலேயே பக்னரின் விரல் உயர்கிறது. நல்ல துவக்கதுடன் வெல்லும் வாய்ப்பிலிருந்த இந்தியா வெற்றி பெற முடியாமல் ஆட்டம் சமநிலையில் முடிகிறது.அதே ஆண்டு சிட்னியில் இந்தியா வெல்ல வேண்டிய ஆட்டம் பக்னரின் திருவிளையாடலால்மீண்டும் சம நிலையில் முடிந்தது.

2003 - 04 பாகிஸ்தான் - லாஹூர் இந்திய பேட்டிங் மோசமாக இருந்தது. ஆனால் பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானை கிடுக்கிப் பிடியில் சிக்க வைத்திருந்தனர். ஆனால் ஐந்தில் நான்கு முறையீட்டை பக்னர் அநியாயமாக நிராகரித்தான். இந்திய பயிற்சியாளர் ஜான் ரைட் ஆட்டம் நடந்துகொண்டு இருக்கும போதே மேல் முறையீட்டாளர் ரஞ்சன் மது கல்லயிடம் இது குறித்த புகாரைச் சமர்ப்பித்தார். அப்படி நடைபெற்றது அதுவே முதல் முறை. எனினும் இந்தியா தோல்வி

2004 - 05 இந்தியா - பாகிஸ்தான் - கொல்கொத்தா அப்துல் ரஸ்ஸாக் வீசிய எகிறு பந்தைத் தவிர்க்க சச்சின் குனிகிறார். பந்து காதோரம் படுகிறது. பக்னர் அயோக்கியத்தனமாக L.B.W. அவுட் கொடுக்கிறான். 52 ரன்கள் எடுத்து அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த டெண்டுல்கர் கண்ணீரோடு வெளியேறுகிறார். ஆட்டம் என்னவாகியிருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை.பக்னரின் ஓர வஞ்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டது இந்தியா அதிலும் குறிப்பாக டெண்டுல்கர். இவனை பக்னர் என்பது கூட மரியாதையாகக் கூறிப்பிடுவதுபோல் இருக்கிறது.

இந்தப் பாதகனை வெறுமனே பக்னன் என்ன்றாலும் பாதகமில்லை என்றே தோன்றுகிற்து.இத்தனை அவலங்களுக்குப் பிறகும் இந்தியா தொடர்ந்து ஆஸ்த்ரேலியாவில் ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்தியா அப்படி வெளியேறினால் இந்தியா அபராதமாக ICC க்கு 7 - 8 கோடி ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டியதிருக்கலாம்.

தொலைக்காட்சி ஒளிபரப்புகளினால் இன்னும் பல கோடிகளை இழக்க நேரிடலாம். உலகக் கோப்பை ஆரம்ப கட்ட வெளியேற்றத்தினால் கூடத்தான் பல ஆயிரம் கோடிகளை இழந்தோம். பரவாயில்லை. பணத்தை விட நாட்டின் மானம்-மரியாதை பெரிது என்பதை பொண்டிங் &Co., வுக்குக் நாம் உணர்த்தியே ஆகவேண்டும்அப்படியல்ல தொட்ர்ந்து ஆட வேண்டுமா, ஹர்பஜான் மீதான தண்டனை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

பக்னர் முற்றாக நீக்கப் பட வேண்டும். பொண்டிங் & C0., தங்கள் கேவலமான நடத்தைக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும். நாம் உப்புப் போட்டு சாப்பிடுபவர்களாக இருந்தால் இந்த நியாயமான நிபந்தனைகளில் உறுதியாக இருக்கவேண்டும்.